Beast | Review | ‘ஒரு சின்ன பொறி தான் கதை, அதை விஜய் தன் மேனரிசத்தால் தீப்பிழம்பாக மாற்றி இருக்கிறார்’
நடிகர் விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி இருந்த ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.
ட்ரெயிலரிலேயே கதை தெரிந்து விட்டது என்றாலும் படத்தில் புதியதாக ஏதாவது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன என்பது எளிதாக ரசிகர்களால் கணிக்க முடிகிறது. தோய்ந்த கதைக்களம், தூக்கி நிறுத்தும் விஜய், ரசிகர்களுக்காக மட்டும் எடுக்கப்பட்ட படம். அவ்வளவு தான்.
அனிருத் இசை, ஒளிப்பதிவு, விஜய் அவர்களின் தெறிக்க விடும் மேனரிசம் என எல்லாம் பக்காவாக அமைந்து இருந்தாலும், ட்ரெயினை மட்டும் ரெடி பண்ணிவிட்டு தண்டவாளம் அமைக்க மறந்த கதையாய், கதை அமைப்பில் கோட்டை விட்டு இருக்கிறார் நெல்சன்.
“ கமெர்சியல் என்ற ஒரு பெயருக்கு பின்னால், என்ன எலிமெண்ட் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து ஒரு சில மாஸ் சீன்கள் வைத்து இருக்கிறார்கள். அதை ரசிகர்களே ஏற்று கொள்ளவில்லை என்பது தான் கூடுதல் பரிதாபம் “
Beast Rating : Full And Full One Man Show, Weak Screenplay, Predictable Scenes, Over All Treat For Fans, Watchable For Neutral. 2.5/5