இன்றைய தினத்தில் இரண்டு பெரிய படங்கள் கோலிவுட்டில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஒன்று நட்சத்திரம் நகர்கிறது, இன்னொன்று கோப்ரா. இந்த விமர்சனத்தில் கோப்ரா திரைப்படம் பற்றி பார்க்கலாம்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து – விக்ரம் – ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி, ஒருவர் எழுத்தின் அதகளம், இன்னொருவர் நடிப்பின் அதகளம், இன்னொருவர் இசையின் அதகளம் மூவரும் இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. படமும் மூன்று வருட உழைப்பு என கூறப்படுகிறது.
முதல் பாதி அதிரடியாக இருந்தது. ஏ ஆர் ரஹ்மானின் இசையும் அதகளம் செய்து இருந்தது. இரண்டாம் பாதியில் ப்ளாஸ் பேக், மிர்னாளினி ரவி சீன்கள், கிளைமேக்ஸ் என்று எதுவுமே திருப்தி அளிக்கவில்லை. முதல் பாதி கொடுத்த இம்ப்ரசனில் இருபது சதவிகிதம் கூட இரண்டாம் பாதி கொடுக்கவில்லை.
“ படத்தின் நீளம் மூன்று மணி நேரத்திற்கும் மேல். தேவையில்லாத சீன்கள் நிறையவே இருக்கிறது. அதையெல்லாம் நீக்கி இருந்தால் படம் கொஞ்சம் பெட்டரா தெரிந்து இருக்கும் “
கோப்ரா திரைப்படத்தின் இடம்பொருள் மதிப்பீடு –