RRR Movie Review | ‘மீண்டும் தான் யார் என்பதை சினிமா உலகத்திற்கு உணர்த்தி இருக்கிறார் ராஜ்மவுலி!’
வலுவான கதைக்களம், அதிரடியான காட்சிகள், உத்வேக நகர்வு என்று ஒவ்வொரு ரசிகனின் பசிக்கும் தீனியாய் ‘RRR’ திரைப்படத்தை கொடுத்து இருக்கிறார் ராஜ்மவுலி.
பிரம்மாண்டம் என்று கதைக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடும் இயக்குநர்களுக்கு மத்தியில், கதையை பிரம்மாண்டப்படுத்தி, அதில் பிரம்மாண்டத்தை காட்டி இருக்கிறார் ராஜ்மவுலி. கிட்ட தட்ட 3.5 வருட உழைப்பு நிச்சயம் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் ராஜ்மவுலி வென்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
அலியா பட் தவிர ஒவ்வொருவருக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ராம்சரண், NTR இருவரும் நண்பர்களாக போட்டி போட்டு நடித்துக் கொடுத்து இருக்கின்றனர். படமாக, கதையாக, திரைக்கதையாக, காட்சியாக என எல்லாவற்றிலும் ராஜ்மவுலி வென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
“ 3 மணி நேரம் படம் என்றாலே தற்போதெல்லாம் ரசிகர்கள் படத்திற்கு போக பயப்படுகின்றனர். ஆனால் ராஜ்மவுலி, அந்த 3 மணி நேரத்திற்கும் ரசிகர்கள் ரசிக்கும்படி கதையை நகர்த்தி ரசிகர்களை உட்கார வைத்து இருக்கிறார்.“
RRR Movie | Idam Porul Rating – 3.5/5 (Engaging Screenplay And Solid Entertainer)