ஏஞ்சலா ராபின்சன் அவர்களின் இயக்கத்தில், லிண்ட்சே லோகன், மைக்கேல் கீட்டன், மேட் திலன் உள்ளிட்டோர் நடிப்பில் 2005 -யில் வெளியாகி கிட்ஸ்களை கவர்ந்த திரைப்படம் தான் ஹெர்பி – Fully Loaded.
ஒரு டப்பாவான கார், அது உடைப்பிற்கு வருகிறது, அதை அங்கு கண்டெடுத்து ஒரு தந்தை தன் மகளுக்கு பரிசாக கொடுக்கிறார். அந்த கார் ஒரு அமானுஷ்யமான கார், அந்த காருக்கு ரேஸ்சில் ஜெயிக்க வேண்டும் என்பது ஆசை. மேகியாக வரும் லிண்ட்சே லோகனை ஹெர்பி பயன்படுத்திக் கொண்டு, ரேசர் ட்ரிப் மர்பியாக வரும் மேட் திலனை எப்படி ரேஸ்சில் ஜெயிக்கிறது என்பது தான் கதைக்களம்.
ஒரு காரை வைத்து என்ன செய்ய முடியும் ஓட்ட முடியும், ரேஸ் சீன் வைக்கலாம், பறக்கும் படி செய்யலாம் ஆனால் இயக்குநர் ராபின்சன் அந்த காரை வைத்து பல இடங்களில் கலகலக்க வைத்து இருப்பார். ஏஞ்சலா ராபின்சனுடன், ஹெர்பி செய்யும் சேட்டைகள் படம் முழுக்க சிரிக்க வைத்திடும். படம் வெளியான போதே பல கிட்ஸ்களை இழுத்துப் போட்டது.
“ உலகளாவிய அளவில் பெரும் வசூலை ஈட்டிய இத்திரைப்படம், 2006 ஆம் ஆண்டு கிட்ஸ் சாய்ஸ் அவார்டையும் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது “
Herbie Fully Loaded OTT : இந்த படம் தற்போது டிஸ்னி ஹாட் ஸ்டார் வலைதளத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என நான்கு மொழிகளில் இருக்கிறது. பார்க்க நினைப்பவர்கள் கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.
https://www.hotstar.com/in/movies/herbie-fully-loaded/1260018297