நிச்சயம் எகிறி அடிக்குமாம் ஜெயிலர், வெளிவரும் ப்ரீவ்யூ ஷோ ரிவ்யூக்கள்!
Jailer First Review Preview Show Response Idamporul
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் ப்ரீவ்யூ ஷோ ரிவ்யூக்கள் பாசிட்டிவாக வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலரின் ப்ரிவ்யூ ஷோக்கள் முடிந்து இருக்கின்றது. படம் பார்த்தவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை ‘நிச்சயம் எகிறி அடிக்கும்’ என்பது தானாம்.
பெரும்பாலும் படத்தின் ப்ரிவ்யூ ஷோக்களை பார்ப்பதெல்லாம் படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் என்பதால் ப்ரிவ்யூக்களில் வரும் ரிவ்யூக்களை எல்லாம் நம்பலாமா என்றும் ஒரு சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும் இந்த முறை நெல்சனின் குறி தப்பாது என்ற நம்பிக்கையும் கொஞ்சம் ரசிகர்களிடம் மேலோங்கியே இருக்கிறது.
“ ரஜினிகாந்த், மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என்று படத்தில் ஏகப்பட்ட நடிப்பு அரக்கர்கள், நம்புவோம் நிச்சயம் நெல்சன் ஏதோ மேஜிக் செய்து இருப்பார், பார்க்கலாம் ஆகஸ்ட் 10 வரை பொறுத்து இருந்து “