Joshuva | Review | ‘வழக்கமான ஹீரோ ஹீரோயினை காப்பாற்றும் டெம்ப்ளேட்’
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில், வருண், கிருஷ்ணா, ராஹேய், திவ்ய தர்ஷினி உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் ஜோஷுவா திரைப்படம் குறித்து இங்கு பார்க்கலாம்.
இயக்குநர் கவுதம் மேனன் அவர்களின் இன்னொரு ஹீரோயினை காப்பாற்றும் டெம்ப்ளேட். கதையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஹீரோ, ஹீரோயினில் மாற்றம் செய்து இருக்கிறார் கவுதம்மேனன். படம் முழுக்க ஆக்சன் நிரம்பி இருக்கிறது. வருண் படத்திற்காக நிறைய உழைத்திருப்பது தெரிகிறது. ஆனால் கவுதம் மேனனும், காலமும் அதை வீணடித்து இருக்கின்றனர் என்றே சொல்லலாம். கார்த்திக் அவர்களின் இசையும் பாடலும் படத்திற்கு அவ்வளவாக வலு சேர்க்கவில்லை.
படத்தின் கருவே கதாநாயகியை இமை போல் காக்க என்பது தான், ஆனால் படத்தில் வருணுக்கும், ராஹேய்க்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி என்பது அபத்தமாக இருக்கிறது. அந்த அடித்தளமே ஆடிப்போவதால், கதாநாயகியை காப்பாற்றினால் என்ன காப்பாற்றா விட்டால் என்ன என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்து விடுகின்றனர். படத்திற்காக ஒரு சில பாராட்டுகள் கொடுக்க வேண்டுமானால், வருண் படத்திற்காக உழைத்திருக்கும் விதம் மற்றும் படத்தின் ஒளிப்பதிவு இந்த இரண்டிற்கும் வேண்டுமானால் மட்டும் கொடுக்கலாம்.
“ வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களை இயக்கிய கவுதம் மேனனை தற்போதெல்லாம் பார்க்க முடியவில்லை. கவுதம் மேனனை சிறந்த நடிகராக பார்ப்பதை விட சிறந்த இயக்குநராக பார்க்க தான் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள் “
ஜோஷுவா இமை போல் காக்க இடம்பொருள் ரிவ்யூ: