Vikram Review | ‘எதிர்பார்ப்பிற்கு மேலான ஒரு தரமான சம்பவம் எனில் அது இது தான்’
Vikram Movie Review In Tamil
ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து திரையரங்கு சென்று எதிலேனும் குறைவுற்று ஏமாந்து போய் வரும் ஒவ்வொரு கோலிவுட் ரசிகனுக்கும் இந்த படம் 200 சதவிகிதம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாய் அமைந்து இருக்கிறது.
அனல் பறக்கும் விறுவிறுப்பான கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரமும் வெறியாக நடித்த விதம், பாஹத் பாசில், விஜய் சேதுபதி இரண்டு பேரும் ஒவ்வொரு சீனிலும் அதகளம் செய்து இருக்கின்றனர். கமல் ஹாசன் அவர்கள் தனக்கே உரிய மேனரிசத்தில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். சூர்யா ஒரு பிக் சர்ப்ரைஸ், கைதியோடு இணையும் கதைக்களம், ஆக மொத்தம் உண்மையில் இது தான் ரியல் ஃபேன் பாய் சம்பவம்.
“ படத்தில் லோகேஷ் கனகராஜ் அவர்களின் பிரம்மாண்ட உழைப்பு தெரிகிறது. ரொம்பவே படத்திற்காக மெனக்கெட்டு இருக்கிறார். எதிர்பார்த்ததற்கும் மேலாகவே படம் இருந்தது என்பது தான் இந்த படத்தின் ஆக மொத்த வெற்றி “
விக்ரம் திரைப்படத்திற்கான இடம்பொருள் மதிப்பீடு – 4/5