பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கும் ‘லியோ’ எப்படி இருக்கிறது?

Loe Review In Tamil Idamporul

Loe Review In Tamil Idamporul

நடிகர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இணைவில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வெளியாகி உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் எப்படி இருக்கிறது, ரசிகர்களை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தை பொறுத்தவரை இது ஒரு நார்மலான கதைக்களம் தான். ஆனால் லோகேஷ் அதை கையாண்டு இருக்கும் விதம் என்பது படத்திற்கு பலம் கொடுக்கிறது. படம் முழுக்க நடிகர் விஜய் அவர்களின் ஆக்சன் தெறிக்கிறது. அனிருத் இசையும் படத்திற்கு பலம். ரசிகர்களுக்கு படம் நிச்சயம் ட்ரீட் தான். ஆனால் படத்திற்கு முன்னதான ஹைப் என்பதை படம் பூர்த்தி செய்யவில்லை. LCU-யுவில் வரவில்லை. ஆனால் LCU-விற்குள் லியோ இழுக்கப்பட்டு இருக்கிறது.

“ ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு படம் முழுக்க சீன்கள் இருக்கிறது. விஜய் அவர்களின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் எல்லாம் பொதுவான ஆடியன்ஸ்களுக்கே சிலிர்ப்பை கொடுக்கிறது. நிச்சயம் படம் பாக்ஸ் ஆபிஸ்சில் ஒரு கலக்கு கலக்கும். ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என்றால் 50 சதவிகிதமே பூர்த்தி செய்து இருக்கிறது “

’லியோ’ இடம்பொருள் மதிப்பீடு:

Rating: 3 out of 5.

About Author