Maamannan Review | ‘மீண்டும் ஒரு அழுத்தமான கதைக்களம், ஆனால் இந்த முறை ஒரு தாக்கத்தை உணர முடியவில்லை’
Maamannan Review In Tamil Idamporul
இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் இயக்கத்தில், உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த ரிவ்யூவில் பார்க்கலாம்.
நடிகர் வடிவேலு, பஹாத் பாசில் நடிப்பில் மிரட்டி இருக்கின்றனர். உதய் நடிப்பில் மேன்மை காட்டி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ்க்கு போதிய வெளிச்சம் படத்தில் இல்லை. ரஹ்மான் அவர்களின் இசை வெறித்தனம். அழுத்தமான கதைக்களம் தான் என்றாலும் கூட இயக்குநர் மாரியின் முந்தைய படங்கள் போல, மனதில் ஒரு பெரும் தாக்கத்தை கொடுக்கவில்லை.
“ நிறைகள் நிறையவே இருக்கிறது படத்தில், ஆனாலும் மாரி செல்வராஜ் என்ற இயக்குநர் படத்தில் நுழைந்து விட்டு வெளிவரும் போது மனதில் ஒரு கனம் இருக்கும், அது இந்த திரைப்படத்தில் கொஞ்சம் மிஸ் ஆகிறது “
மாமன்னன் இடம்பொருள் மதிப்பீடு –