Manushi | Trailer | Review | ‘சம கால அரசியல் பலவற்றை பேச துடிக்கிறது மனுசி’

Manushi Trailer Review In Tamil Idamporul

Manushi Trailer Review In Tamil Idamporul

வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கோபி நைனார் அவர்களின் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா, நாசர், தமிழ், ஹக்கீம் என பலரின் நடிப்பில், இளையராஜா அவர்களின் இசையில் உருவாகி இருக்கும் ‘மனுசி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் குறித்து பார்க்கலாம்.

பிணைக்கைதிகளாக பிடிக்கப்படும் இருவர், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை, அதற்கு வரும் பதில்கள், அதற்குள் ஒரு சமகால அரசியல் என பலவற்றை மனுசி பேசி இருக்கும் என்பது போல தெரிகிறது. இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் விசாரணை திரைப்படத்தின் சாயல் கொஞ்சம் தெரிகிறது என்றாலும் கூட இந்த படம் பேசும் அரசியல் வேறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் கோபி நைனார் இதற்கு முன்பு உருவாக்கிய அறம் திரைப்படம், தேசத்தின் பல சமகால பிரச்சினைகளையும், பல சம கால அரசியல்களையும் தைரியமாக பேசி இருக்கும். அந்த வகையில் இந்த ‘மனுசி’ திரைப்படமும் பலரும் பேச தயங்கும் பல விடயங்களை போட்டு உடைக்கும் என்பதில் ஐயமில்லை என தெரிகிறது.

“ ஒரு படத்தின் ட்ரெயிலரை பார்க்கும் போதே, படத்தின் வெற்றி என்பது நம் உணர்வுக்கு புலப்படும், அந்த வகையில் மனுசி என்னும் உருவாக்கம் அந்த ஒரு உணர்வை தான் கொடுக்கிறது, மனுசி நிச்சயம் தைரியம் பேசும் “


About Author