நட்சத்திரம் நகர்கிறது | ‘குறியீடுலாம் இல்லை, நேரடி தாக்குதல் தான் ஒவ்வொரு வசனமும்’

Natchathiram Nagargirathu Movie Review

Natchathiram Nagargirathu Movie Review

நட்சத்திரம் நகர்கிறது, கோப்ரா என இரண்டு படங்கள் இன்று உலகம் முழுக்க வெளியாகி இருக்கிறது. தியேட்டர் லிஸ்ட்டை பொறுத்தவரை கோப்ராவின் ஆதிக்கமே இருப்பதாக சொல்லப்படுகிறது. சரி படம் எப்படி இருக்கிறது என்பதௌ பார்க்கலாம்.

காதலுக்கு சாதியில்லை, மதமில்லை என்பது இருக்கட்டும், காதலுக்கு வயதும், பாலினமும் கூட இல்லை என்பதை அழுத்தமான வசனங்களுடன் சொல்லி இருக்கும் படம் தான் நட்சத்திரம் நகர்கிறது. குறியீடுலாம் இல்லை, ஒவ்வொரு வசனமும் கிட்டதட்ட நேரடி தாக்குதல் தான். நிச்சயம் இந்த படம் பேசும் அல்லது பேசப்படும்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கப்பட்டு இருக்கிறது. கதைக்காக இயக்குநர் ரஞ்சித் அவர்கள் மெனக்கெட்டு இருக்கிறார். இசை, ஒளிப்பதிவு, நடிகர்கள் தேர்வு என்று ஒன்றொன்றும் கூட்டாக சேர்ந்து ஒரு சினிமா விருந்தை கொடுத்து இருக்கிறது. நிச்சயம் இப்படம் ஒரு சிலருக்கு அழுத்தமாகவும், ஒரு சிலருக்கு எரிச்சலாகவும் அமையும்.

“ வசங்கள் ஒவ்வொன்றும் அழுத்தமாக இருந்தாலும் கூட, படம் முழுக்க வசனமாகவே இருந்தது போலவே இருந்தது. வசனத்திற்கு பதில் வசனத்திற்கு ஏற்றவாரு ஆங்காங்கே அழுத்தமான காட்சிகளை வைத்து இருக்கலாம் “

நட்சத்திரம் நகர்கிறது இடம் பொருள் மதிப்பீடு –

Rating: 3.5 out of 5.

About Author