படையப்பா | Re-View | ‘ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது படையப்பா’
ஆறு படையப்பன் என்ற கதாபாத்திரத்திற்கும், நீலாம்பரி என்ற கதாபாத்திரத்திற்கும் இடையேயான ஒரு குளிர் யுத்தமே இந்த படையப்பா.
கே எஸ் ரவி குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் ரஜினி நடித்து 1999 காலக்கட்டங்களில் வெளியான திரைப்படம் தான் இந்த படையப்பா. படத்திற்கென ரஜினி அமைத்துக் கொண்ட தனி ஸ்டைல், ஒவ்வொரு மாஸ் சீனுக்கும் இடையில் ஏ ஆர் ரஹ்மானின் அசத்தல் பிஜிஎம் என்று அந்த காலக்கட்டத்தில் திரையரங்குகளில் ஒவ்வொரு சீனுக்கும் விசில் பறந்து கொண்டு இருந்தது.
ரஜினி என்னும் பெரிய ஹீரோவிற்கு, ஒரு நடிகை எதிர்கதாபாத்திரம் ஆக வேண்டும் என்றால் அந்த கதாபாத்திரம் அவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும். கே எஸ் ரவிகுமார் எப்படி ரம்யா கிருஷ்ணனை அந்த நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தாரோ தெரியவில்லை. ஆனால் அவர் அவ்வளவு கச்சிதமாய் அவ்வளவு வலிமையாய், ஆறுபடையப்பன் என்ற ரஜினியை எதிர்த்து நின்றதே இந்த படத்தின் ஏகபோக வெற்றிக்கு காரணமாய் அமைந்தது.
ரம்யா கிருஷ்ணன் அவர்கள் படம் முழுக்க அந்த நீலாம்பரியாகவே வாழ்ந்து இருப்பார். இது போக நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் தனக்குரிய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து இருப்பார். இது போக மணி வண்ணன், சவுந்தர்யா, ராதா ரவி, நாசர் உள்ளிட்டோரும் தனக்கான கதாபாத்திரத்தை அப்படியே ஏற்று நடித்து கொடுத்து இருந்தனர். ஸ்டைல் என்றால் ரஜினி என்றே பலரும் கூறி வந்த நிலையில், இந்த படத்தில் ரஜினிக்கு நிகராக ரம்யா கிருஷ்ணன் அவர்களும் ஸ்டைலில் பின்னி பெடலெடுத்து இருப்பார்.
கதைக்குள் நிறைய கிளை கதைகள் இருந்தாலும் வழக்கமான ஒரு ரிவெஞ் ஸ்டோரி தான் இந்த படையப்பா. ஆனாலும் அதற்குள் உச்சக்கட்ட சீன்கள், மாஸ் மசாலா, ஸ்டைல், கெத்து சீன்கள், காமெடி, எமோசன்ஸ், அதிரடி சண்டை காட்சிகள், அசத்தலான பாட்டுகள் என்று எல்லாம் சேர்த்து ஒரு சூப்பர் கமெர்சியல் பேக்கேஜ் ஆக நம் கைகளில் கொடுத்து இருப்பார் இயக்குநர் கே எஸ் ரவிகுமார். இன்று பார்த்தாலும் அன்று பார்த்தது போல புல்லரிக்கும். அது தான் படையப்பா.
” படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த படங்களுள், இந்த படையப்பா நிச்சயம் அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு தியேட்டர் கொண்டாட்டமாக தான் இருக்கும். இன்று ரிலீஸ் செய்தாலும் அதே கொண்டாட்டம் தியேட்டர்களின் இருக்கும் “