Premam | Re-View | ‘அப்படியே மீண்டும் நம்மை நம் கடந்த காலத்திற்குள் பயணிக்க வைத்த ஒரு திரைப்படம்’
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்களின் இயக்கத்தில், நிவின் பாலி, அனுபாமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி உலகளாவிய அளவில் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் தான் பிரேமம்.
ஜியார்ஜ் என்னும் இளைஞன், அவனுடைய வாழ்வின் மூன்று பருவங்கள், அதில் துளிர்க்கின்ற காதல்கள், அதோடு பயணிக்கும் நட்பு இவ்வளவு தான் பிரேமம். ஒரு சிறு பேப்பருக்குள் அடங்கி விடும் படம் எப்படி இவ்வளவு ஹிட் ஆனது என்று கேட்டால், விளக்கம் சிறியது தான். அது ஒவ்வொரு ஆடியன்ஸ்சும் வாழ்ந்த வாழ்வியல். எப்போதுமே ஒரு ரசிகனுக்கு தன் வாழ்வியலை திரையில் காண பிடிக்கும். அப்படி பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் வாழ்வியலை திரையில் கண்டு ரசித்த படம் தான் பிரேமம்.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் எழுத்து, ராஜேஷ் முருகனின் இசை, அனந்த் சி சந்திரனின் ஒளிப்பதிவு என படத்தில் அத்துனையுமே பேசுபொருள் தான். நடிகர்களின் தேர்வும், ஒவ்வொரு காட்சியும் படமாக்கப்பட்ட விதம், படத்தை காட்சி அமைக்கப்பட்ட தேர்ந்து எடுக்கபட்ட இடங்கள் என அல்போன்ஸ் படம் முழுக்க ஒரு தேர்ந்த இயக்குநராக தெரிவார்.
“ வெறும் 4 கோடியில் எடுக்கப்பட்ட பிரேமம் திரைப்படம் உலகளாவிய அளவில் 75 கோடி வசூல் செய்தது, மலையாளத்தில் மட்டும் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கேரளாவில் 150 நாட்கள் ஓடியது, ஆனால் தமிழகத்தில் 300 நாட்களுக்கும் மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது “