Jailer Review | ’முத்து வேல் பாண்டியனாக ரஜினி எப்படி?, நெல்சன் ஜெயித்தாரா? ’
இயக்குநர் நெல்சன் மற்றும் ரஜினி அவர்கள் இணைவில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
படம் முழுக்க டைகர் முத்து வேல் பாண்டியனின் அதிரடி களத்திற்கான ஸ்பேஸ்சை திறம்பட வடிவமைத்து இருக்கிறார் நெல்சன். ரஜினி என்னும் மாஸ் நடிகரை ரொம்ப வருடத்திற்கு பிறகு நெல்சன் சரியாக உபயோகப்படுத்தி இருக்கிறார். ஒரு கமெர்சியல் படத்திற்கான அத்துனையும் படத்தில் இருக்கிறது. நெல்சன் ஜெயித்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.
ஒரு அலெக்ஸ் பாண்டியனை திரும்பவும் திரையில் பார்த்தது போல ஒரு உணர்வு. டெக்னிக்கலாகவும் படம் வலிமையாகவே வந்து இருக்கிறது. அனிருத் அவர்களின் இசை, படம் முழுக்க ஒரு பெரிய சப்போர்ட் கொடுக்கிறது. ஒரு ரசிகனாக படத்திற்கு சென்றால் செலிபிரேட் செய்ய நிறையவே மாஸ் போர்சன்ஸ் இருக்கிறது.
“ படத்தில் மைனஸ் இல்லையா, லாஜிக் இடிக்கவில்லையா என்றால் நிறைய இருக்க தான் செய்கிறது. ஆனால் டைகர் முத்துவேல் பாண்டியன் அவர்களின் மேனரிசம் அதை எல்லாம் முன் நிறுத்தாமல் படம் முழுக்க அவரை முன் நிறுத்தி விடுவதே படத்தின் பெரிய பிளஸ் “
’ஜெயிலர்’ இடம் பொருள் மதிப்பீடு: