Sivaji The Boss | Re-View | ‘ஸ்டைலிஷ் ஆன மாஸ் ஆன கருத்தான ஒரு கமெர்சியல் படம்’

Rajini Kanth In And As Sivaji Movie Re View In Tamil Idamporul

Rajini Kanth In And As Sivaji Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினி, ஸ்ரேயா சரண், விவேக், மணிவண்ணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 2007 ஆம் ஆண்டு வெளியாக மிகப்பெரிய ஹிட் திரைப்படம் தான் சிவாஜி தி பாஸ்.

சிவாஜியாக ரஜினிகாந்த், தான் வெளிநாடுகளில் சம்பாதித்த கோடிகளை எல்லாம், தான் பிறந்து வளர்ந்த தமிழ் நாடு, தமிழ் மக்களின் நன்மைக்காக, இலவச கல்வி, இலவச மருத்துவம் என பல திட்டங்களை கொண்டு வர முயல்கிறார். ஆனால் இங்கு ஏற்கனவே இவற்றை எல்லாம் நடத்திவரும் கார்பரேட் நிறுவனங்கள் தாங்கள் கோடிகளில் சம்பாதித்து வரும் இந்த நிறுவனங்களை, சிவாஜி இலவசமாக நடத்தி விட்டால் தங்கள் நிறுவனங்கள் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு சிவாஜியின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

இதையெல்லாம் சிவாஜி எப்படி சமாளித்தார், அவரால் அவர் நினைத்ததை ஏழை எளியோர்க்கு செய்ய முடிந்ததா? அதனால் அவருக்கு வரும் இடையூறுகள் என்ன? இவற்றை எல்லாம் சுவாரஸ்யமாக சொல்வது தான் இந்த சிவாஜி தி பாஸ். இதற்குள் ஒரு கருப்பு பணம் குறித்த விழிப்புணர்வு, ஆங்காங்கே கமெர்சியல் எலிமெண்ட்ஸ், ஏ ஆர் ரஹ்மானின் துள்ளல் பாடல்கள், ரஜினியின் மாஸ் தெறிக்கும் சீன்கள் என பலவற்றை சொருகி ரசிகர்களை ஷங்கர் திருப்தி படுத்தி இருப்பார்.

படத்திற்கு ஆகச்சிறந்த ப்ளஸ், படம் முழுக்க ரஜினி அவர்கள் செய்யும் மேனரிசம் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் செய்து இருக்கும் மேஜிக். இவை இரண்டும் தான் திரைப்படத்திற்கு அடித்தளம் என்றே சொல்லலாம். படம் 3 மணி நேரத்திற்கு மேல் ஓடிய போதும் கூட ஒரு இடத்தில் கூட படத்தில் தொய்வு இருக்காது. அது ஷங்கரும் ரஜினி அவர்களும் படம் முழுக்க செய்து இருக்கும் மேஜிக்.

“ உலகளாவிய அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்த சிவாஜி திரைப்படம் தான், தமிழ் சினிமாவின் முதன் முதலில் 100 கோடி வசூல் செய்த திரைப்படம். ஒட்டு மொத்தமாக 160 கோடி வரை படம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது “

About Author