இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ எப்படி இருக்கிறது?
Viduthalai Movie Review Tamil Idamporul
நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படம் உலகளாவிய அளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
எழுத்தாளர் ஜெயமோகனின் ’தூயவன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் விடுதலை. சூரி நடிப்பில் தேர்ந்தவராக தெரிகிறார். விஜய் சேதுபதி வழக்கம் போல கதாபாத்திரமாகவே நடித்துக் கொடுத்து இருக்கிறார். பவானி ஸ்ரீ நடிப்பு அருமை, பின்னனி இசை பேசும் அளவுக்கு இல்லை. மற்ற அனைத்தும் முழுமையாக இருந்தாலும் கூட, வெற்றிமாறன் படம் என்று அழுத்தமாக சொல்லும் அளவுக்கு இல்லை.
ஒருவேளை இரண்டாவது பார்ட்டில் ஏதாவது வெற்றி மேஜிக் செய்து இருக்கலாம். சொல்வதற்கு குறை ஒன்றும் இல்லை. ஆனாலும் வெற்றிமாறனின் திரைப்படத்திற்கு என்று ஒரு ஸ்டாண்டர்டு இருக்கும். அந்த ஸ்டாண்டர்டை ஒரு 70 சதவிகிதம் மட்டுமே விடுதலை முதல் பாகம் பூர்த்தி செய்ததாக உணர முடிந்தது.
” எப்போதும் வெற்றிமாறன் படம் என்றால், படம் முடிந்து வெளியில் வரும் போது வெற்றிமாறன் பெயர் தான் மனதில் அழுத்தமாக பதியும், ஆனால் விடுதலை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் மட்டுமே அழுத்தமாக பதிந்து இருக்கிறது ”