சென்னை ஐஐடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை, புகார் அளித்த மாணவியிடம் ஆதாரம் கேட்ட நிர்வாகம்!

IIT Chennai Girl Sexually Assaulted

சென்னை ஐஐடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேறி இருப்பதாக மாணவி ஒருவர் புகார் அளித்து இருக்கிறார். சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன்னை போல் பலருக்கும் இது நிகழ்ந்து இருப்பதாகவும் மாணவியே முன்வந்து புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். ஆனால் நிர்வாகமோ புகார் அளித்த அந்த மாணவியிடம் ஆதாரம் கேட்டு இருக்கிறதாம். ஒரு பாலியல் புகார் ஒன்று வந்தால் அந்த புகார் சம்மந்தமாக விசாரிக்க வேண்டுமே தவிர, அந்த … Read more

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே உள்ள சாலைக்கு அவரின் பெயர்!

Chinna Kalaivanar Vivek Road

மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக அவரது இல்லம் அருகே இருக்கும் சாலைக்கு அவரின் பெயரை சூட்டி கவுரவித்து இருக்கிறது தமிழக அரசு. உடல்நலக்குறைவால் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் நினைவாக, அவரது இல்லம் அருகே இருக்கும் சாலைக்கு சின்ன கலைவாணர் விவேக் சாலை என்று பெயரிட்டு அரசாணை பிறப்பித்து இருக்கிறது தமிழக அரசு. நடிப்போடு விட்டு விடாமல் கலாம் அவர்களின் வழியில் பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தவர் விவேக். உயிராக இல்லையெனினும் மக்கள் மனதில் … Read more

மீண்டும் ஒரு சாத்தான்குளம் சம்பவம், சென்னை இளைஞர் லாக் அப்பில் மரணம்!

Another Lockup Death In Tamilnadu

கடற்கரையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் சென்னையை சேர்ந்த விக்னேஷ்(25) என்ற இளைஞர் லாக்கப்பில் மரணம் அடைந்து இருப்பது தமிழகத்தை மீண்டும் உலுக்கி இருக்கிறது. ஆட்டோவில் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட சென்னையில் குதிரை ஓட்டி பிழைப்பு நடத்தும் இளைஞர் விக்னேஷ்(25) லாக் அப்பில் மரணம் அடைந்து இருக்கிறார். காவல் துறை சார்பில் வலிப்பு வந்து இறந்து விட்டதாக கூறப்பட்டாலும் அவரின் உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு … Read more

பெருகும் லோன் செயலி மோசடி, சிக்கித் தவிக்கும் பொது மக்கள்!

Loan App Frauds Are Increasing In TamilNadu

லோன் செயலி மூலம் பணம் கொடுப்பது போல கொடுத்து விட்டு அவர்கள் பணத்தை திரும்ப செலுத்தினாலும் கூட தொடர்ந்து அவர்களை டார்ச்சர் செய்யும் நிலை பெருகி வருகிறது. சென்னையில் ஒரு இளம் பெண் ஒரு அவசர தேவைக்காக, பியோனி கேஷ் என்ற செயலி மூலம் 12,000 லோன் எடுத்து இருக்கிறார். அதை குறிப்பிட்ட காலத்தில் கட்டிய போதும் கூட கட்டவில்லை என்று ஆபாச வார்த்தைகளால் தொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி தற்கொலை எண்ணத்திற்கு போகும் அளவிற்கு தூண்டி … Read more

மகளிடம் அத்து மீறிய கணவனைக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை!

Daughter Assualt Case Father Killed Mother Released

சென்னையில் தன் மகளை காக்கும் நோக்கில் தன் கணவனையே அடித்துக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் தனது 20 வயது மகளிடம் அத்து மீறீயதை அடுத்து அவரின் மனைவியே அவரை சுத்தியலால் தாக்கியதாய் தெரிகிறது. இதில் அவர் இறந்து விடவே வழக்கு காவல் நிலையத்திற்கு சென்றது. தன் மகளைக் காக்கவே, தாக்கியதை கருத்தில் கொண்டு அப்பெண் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு இருக்கிறார். “ … Read more

சென்னையில் நிலநடுக்கம் | பல்வேறு உள்நகரங்களிலும் உணரப்பட்டதாக தகவல்!

Earth Quake In Chennai 16 01 2022

சென்னையில் ஆங்காங்கே நில அதிர்வு உணரப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி வருகிறது. சூழலியல் மாற்றங்களால் இயற்கை அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கிறது. காலநிலை மாற்றங்களும் பேரிடர்களும் பெருகி வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக பலரும் சமூக வலை தளங்களில் தெரிவித்து வருகின்றனர். வெகுவிரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். “ சுற்றுச்சூழல் மாற்றங்களாலும், சூழலியல் மாற்றங்களாலும், பல்வேறு பேரிடர்களை உலகம் சந்தித்து வருகிறது. மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட உலகம் மனிதர்களாலே அழிகிறது “

சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதல் பறக்கும் கார்!

Asias First Hybrid Flying Car Developed By Chennai Based Vinata Team Members

வினடா ஏரோமொபிலிட்டி எனப்படும் நிறுவனம் ஆசியாவின் முதல் பறக்கும் காரை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு சென்னையில் செயல்படும் ‘வினடா ஏரோமொபிலிட்டி’ நிறுவனத்தை சேர்ந்த மாணவர்கள் குழு ஆசியாவின் முதல் பறக்கும் காரை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. ஓட்டுநரே இல்லாமல் இயங்க கூடிய இந்த பறக்கும் கார் 2023 இல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 10,000 அடி உயரத்திற்கு பறக்க கூடிய திறன் உடைய இந்த பறக்கும் கார் அதிகபட்சமாக 120 … Read more

ஒரு வயது குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை புரிந்து உலகச்சாதனை படைத்த மருத்துவர்கள்!

சென்னையில் ஒரு வயது மட்டுமே நிரம்பிய குழந்தை ஒன்றுக்கு பிறப்பிலேயே நுரையீரல் குறைபாடு இருந்தது அறியப்பட்டது. தற்போது அக்குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைச்சிகிச்சை மூலம் இரண்டு நுரையீரலையும் மாற்றி உலகச் சாதனை படைத்து இருக்கின்றனர் சென்னை மருத்துவக்குழுவினர். சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஒரு வயது குழந்தை ஒன்று பிறவியிலேயே ஆக்சிஜன் செறிவுத்திறன் குறைபாட்டுடன் அனுமதிக்கப்பட்டிருந்தது. பரிசோதித்ததில் இரண்டு நுரையீரல்களும் மாற்றினால் மட்டுமே குழந்தை பிழைக்க இயலும் என்ற நிலை இருந்ததாக கூறப்படுகிறது. பெரியவர்களுக்கே மாற்று அறுவைச்சிகிச்சைக்கு உடல் … Read more