இந்தியாவில் 61 கோடியை எட்டியிருக்கிறது தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விடுத்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் 61 கோடி பேரை எட்டியிருக்கிறது இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை. மேலும் வயது வந்தோர்களில் குறைந்தபட்சம் ஒருதவணையாவது தடுப்பூசி செலுத்தியவர்களின் விகிதத்தில் 50 சதவிகிதத்தை எட்டி சாதனை புரிந்திருக்கிறது இந்தியா. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு இந்த விழிப்புணர்வு தொடர்ந்து சேர வேண்டும் என்றும் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக 44,558 பேருக்கு கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 44,558 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 493-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,889-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றினால் குணமாகி வெளியானோரின் எண்ணிக்கை 32,926-ஆக உள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 59.79 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் முதல் தவணையை எடுத்துக்கொண்டவர்கள் 46.33 … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,397 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 608 பேர் ஒரே நாளில் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,396-ஆக உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 59 கோடியை கடந்துள்ளது உள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரையில் 100 பேருக்கு 44.17 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். உலகளாவிய அளவில் ஒரு நாளில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3,32,695-ஆக உள்ளது. கடந்த … Read more

இந்தியாவில் மீண்டும் ஏறுமுகமாய் இருக்கும் கொரோனோ தொற்று!

Corona count 24 August 2021

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 37,607-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் 647-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,35,788-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினத்தை விட புதிய தொற்று எண்ணிக்கையும்,பலி எண்ணிக்கையும் இந்தியாவில் கிட்டதட்ட மூன்று மடங்காக கூடி உள்ளது.ஏறுமுகமாகவும் இறங்குமுகமாகவும் இருக்கும் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை காரணமாக மூன்றாவது அலையை கணிப்பது மருத்துவ வல்லுநர்களுக்கு சவாலாகவே … Read more

குறைத்து காண்பிக்கப்படுகிறதா கொரோனோ தொற்று…?

Corona count reduced

தொடர்ந்து நாற்பதாயிரத்தில் நிலையாக நின்று வந்த கொரோனோ தொற்று கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து வந்தது. ஆனால் மருத்துவ வல்லுநர்களோ தொற்று அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் புள்ளி விவரங்கள் குறைவாக காண்பிக்கப்படுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை நிபுணர் ரிஜோ எம் ஜான் கூறுகையில் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வந்ததாகவும், அதன் விளைவாக கடந்த இரண்டு வாரங்களாக … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 11,359 பேருக்கு புதியதாக தொற்று,266 பேர் தொற்றுக்கு பலி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,359 பேர் புதியதாக தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் 266 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,35,050-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் 58 கோடியை கடந்துள்ளது. முதல் தவணையாக 45.11 கோடி பேரும் இரண்டாவது தவணையாக 12.95 கோடி பேரும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முதல் … Read more

கொரோனோ மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் பெறும் – தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்

நேற்றைய தினம் வரை இந்தியாவில் புதிய தொற்றின் விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. மீட்பு விகிதமும் இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் தான் மூன்றாவது அலையின் பயத்தை கொடுத்திருக்கிறது தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் பிரதமர் அலுவலகத்தில் கொடுத்திருக்கும் அறிக்கை. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் மூன்றாவது அலை குறித்த அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் கொரோனோ மூன்றாவது … Read more