தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,551 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,551-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 34,856-ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 230 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக சென்னையில் 182, செங்கல்பட்டில் 122, ஈரோடு மாவட்டத்தில் 115 தொற்றுகள் பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

இந்தியாவில் 63 கோடியை எட்டியிருக்கும் தடுப்பூசி உபயோகம்!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65 லட்சத்திற்கும் மேலானோர் தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 63 கோடியைக் கடந்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகள் மக்களைச் சேர்ந்து வந்தாலும் முதல் தவணையின் போது வருகின்ற சின்ன சின்ன பக்க விளைவுகளான காய்ச்சல்,உடல் அசதி போன்றவைகளுக்கு பயந்து பெரும்பாலானோர் இரண்டாவது தவணை எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர். சாதாரண சின்ன சின்ன விளைவுகளுக்கு பயந்தால் பெரும் விளைவுகளை எதிர்கொள்ள … Read more

ஒரே நாளில் ஒரு கோடி பேரை சென்றடைந்திருக்கும் தடுப்பூசி!

கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி என்றிருக்கையில் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 62 கோடியை கடந்துள்ளது. இ்ந்தியாவில் நேற்றைய ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி பேரைச் சென்றடைந்திருக்கிறது தடுப்பூசி. இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச அளவு இது ஆகும். கடந்த ஆகஸ்ட் 17 அன்று ஒரே நாளில் 88 லட்சம் பேரைத் தடுப்பூசி சென்றடைந்ததே இது வரை அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் நேற்று ஒரு கோடியைத் … Read more

200 கோடி தடுப்பூசியை செலுத்தி புதிய சாதனை புரிந்திருக்கும் சீனா!

கொரோனோ முதன் முதல் கண்டறியப்பட்ட நாடான சீனாவில் கொரோனோ பரவலுக்கு எதிராக 200 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அத்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்ட தட்ட 140 கோடி இருக்கும் சீன மக்கள் தொகையினுள் 89 கோடி பேருக்கு இரண்டு தவணையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளது சீனா அரசு. அது மட்டுமில்லாது 200 கோடிக்கும் மேல் தடுப்பூசியை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,805 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,805-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 514-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,37,403-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்று குணமாகி வெளியோனோரின் எண்ணிக்கை 31,341-ஆக உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியைக் கடந்துள்ளது. தேசத்தில் 100 பேருக்கு தலா 45.34 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து … Read more

இந்தியாவில் 61 கோடியை எட்டியிருக்கிறது தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விடுத்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 80 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதன் மூலம் 61 கோடி பேரை எட்டியிருக்கிறது இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை. மேலும் வயது வந்தோர்களில் குறைந்தபட்சம் ஒருதவணையாவது தடுப்பூசி செலுத்தியவர்களின் விகிதத்தில் 50 சதவிகிதத்தை எட்டி சாதனை புரிந்திருக்கிறது இந்தியா. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு இந்த விழிப்புணர்வு தொடர்ந்து சேர வேண்டும் என்றும் … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதியதாக 44,558 பேருக்கு கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 44,558 பேர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 493-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,36,889-ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றினால் குணமாகி வெளியானோரின் எண்ணிக்கை 32,926-ஆக உள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 59.79 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் முதல் தவணையை எடுத்துக்கொண்டவர்கள் 46.33 … Read more

கேரளத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனோ தொற்று

கேரளத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த கொரோனோ தொற்று இன்று புதிய உயரத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமான பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இன்று ஒரே நாளில் 31,445 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 215 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி கேரளாவில் 19,972-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்படும் விகிதமும் 19.03 … Read more

தமிழகத்தில் வருகிறது 24 மணிநேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் – தமிழக அரசு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மருத்துவம் மற்றும் மக்கள்நலவாழ்வு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் அறிவுறுத்தல்களின்படி அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், புறநகர் மருத்துவமனைகள் என யாவற்றையும் கூட்டாக ஒன்றிணைத்து 55 தடுப்பூசி மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டமைக்கப்படும் என்று தமிழக அரசின் வழிகாட்டுதல்களின் படி இயங்கும், … Read more

இந்தியாவில் வெகுவாக குறைந்து வரும் கொரோனோ தொற்று – இந்திய மருத்துவ கவுன்சில்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,735 பேருக்கு புதியதாக தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 385 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாகவும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 4,34,784-ஆக உயர்ந்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு முப்பதாயிரத்திற்கும் கீழ் குறைந்திருக்கிறது இந்தியாவில் கொரோனோ தொற்று. தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 57.62 கோடியாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 100 பேருக்கு 43.24 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தொற்று … Read more