அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விட வங்கி கூட்டமைப்பு நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை!
அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடக்கோரி வங்கி கூட்டமைப்புகள் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்து இருக்கின்றன. ஒரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு ஏற்கனவே விடுமுறை இருக்கும் நிலையில், வங்கி கூட்டமைப்புகள் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடக்கோரி நிதி அமைச்சகத்திடம் எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்படும். இதனால் பளு மக்களுக்கா வங்கி ஊழியர்களுக்கா என்று கேட்டால் … Read more