எலெக்ட்ரிக் பைக் வாங்கலாமா அல்லது பெட்ரோல் பைக் வாங்கலாமா என்பதில் குழப்பமா? இதோ உங்களுக்கான தீர்வு!

Electric Bike Or Fuel Bike Are You Confused Solution Here Idamporul

Electric Bike Or Fuel Bike Are You Confused Solution Here Idamporul

பெரும்பாலானோர் பைக் எடுக்க வேண்டும் என நினைக்கும் போது தற்போது குழம்பி நிற்பது இந்த ஒரு காரணத்தில் தான், அதாவது எலெக்ட்ரிக் பைக் வாங்கலாமா அல்லது பெட்ரோல் பைக் வாங்கலாமா என்பதில் தான்.

பொதுவாகவே அனைவரும் எளிதில் சொல்லி விடுவது ’எலெக்ட்ரிக் பைக் வாங்கிடுங்க ஒரு நாளைக்கு 10 ரூபாய்க்கு சார்ஜ் போட்டா 100 கிமீ போகலாம்’ என்பது தான். ஆனால் அதுவே அதே 100 கிமீ, ஒரு பெட்ரோல் பைக்கில் செல்ல வேண்டுமானால் குறைந்த பட்சம் 200 ரூபாய்க்காவது பெட்ரோல் போட வேண்டியது அவசியம் ஆகிறது அதாவது 20 மடங்கு அதிக செலவீனம். இந்த ஒரு கருத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் அனைவரும் எலெக்ட்ரிக் பைக்கை எளிதில் தெரிவு செய்கின்றனர். ஆனால் இதிலும் நிறையவே சிக்கல்கள் இருக்கிறது.

சரி என்ன தான் தீர்வு? பார்க்கலாம்.

பொதுவாக மோட்டார் வாகன விதிகளின் படி ஒரு பெட்ரோல் வண்டியை ஒருவர் நல்ல கண்டிசனில் இருக்கும் பட்சத்தில் 15 வருடங்கள் வரை உபயோகிக்கலாம். ஒரு எலெக்ட்ரிக் வண்டியை எடுத்துக் கொள்ளும் போது பேட்டரிக்கு 3 வருடம் வரை வாரண்டி கொடுக்கின்றனர். ஒரு எலெக்ட்ரிக் வண்டியின் பேட்டரியும் அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை தாக்கு பிடிப்பதாக ஒரு தகவல்.

நாம் இரண்டு வண்டிகளுக்கும் ஒரு 10 வருடங்களுக்கான செலவீனத்தை பார்க்கலாம்

முதலில் பெட்ரோல் பைக்கை பார்க்கலாம்

நாள் ஒன்றுக்கு 30 கிமீ வீதம் சென்றால் மாதத்திற்கு 900 கிமீ வருடத்திற்கு 10,800 கி.மீ
நாம் அதை 11,000 கிமீ என்றே எடுத்துக் கொள்ளலாம்.

நம்முடைய பெட்ரோல் வண்டி 50 கிமீ மைலேஜ் கொடுக்குமாயின்
11,000/50 = 220, அதாவது நாம் 11,000 கிமீ செல்ல வேண்டுமானால் வருடத்திற்கு 220 லிட்டர் பெட்ரோல் இட வேண்டி இருக்கும்.

பெட்ரோல் விலை 105 ரூபாய் என எடுத்துக் கொண்டால்

220 * 105 = 23,100 ,
ஒரு வருடத்திற்கான பெட்ரோல் பைக்கின் பெட்ரோல் செலவு 23,100, அதுவே 10 வருடங்களுக்கு கணக்கிட்டால் 2,31,000 ரூபாய், 10 வருடங்களுக்கான தேய்மான செலவீனம் ஒரு 1,00,000 ரூபாய் எடுத்துக் கொண்டால் தோராயமாக ஒரு பெட்ரோல் பைக் நல்ல ஓடுதலில் இருக்கும் போது 10 வருடத்திற்கு 3,30,000 ரூபாய் வரையில் செலவீனம் ஆகிறது.

50 கிமீ வரை மைலேஜ் கொடுக்கின்ற ஒரு பெட்ரோல் பைக்கின் விலை அதிகட்சமாக 1,30,000 ரூபாய் வரை இருக்கிறது.

10 வருடத்திற்கான ஒரு பெட்ரோல் வண்டியின் ஒட்டு மொத்த செலவீனம் (வண்டி விலை சேர்த்து), வண்டிவிலை + பெட்ரோல் + தேய்மானம் உட்பட: பைக் விலை 1,30,000 ரூபாய் + 10 வருடத்திற்கான பெட்ரோல் மற்றும் தேய்மான செலவீனம் 3,30,000 ரூபாய் = 4,60,000 ரூபாய்

தற்போது எலெக்ட்ரிக் பைக்கை எடுத்துக் கொள்வோம்

மாதத்திற்கு எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை சார்ஜ் இட 500 ரூபாய் எடுத்துக் கொண்டால்,

வருடத்திற்கு பேட்டரியை சார்ஜ் செய்ய ஆகும் செலவு 500 * 12 = 6000 ரூபாய்
10 வருடத்திற்கு பேட்டரியை சார்ஜ் செய்ய ஆக ஆகும் செலவு = 60,000 ரூபாய்

என்ன தான் எலெக்ட்ரிக் வண்டிக்கு லைஃப் 5 வருடம் என்று உத்தரவாதம் கொடுத்தாலும் கூட, குறைந்த பட்சம் எலெக்ட்ரிக் வண்டிகளுக்கு 3.5 வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரியை மாற்ற வேண்டியது அவசியம் ஆகிறது, அப்படிப் பார்த்தால் 10 வருடங்களுக்கு 3 பேட்டரி மாற்ற வேண்டி இருக்கும் என தெரிகிறது. ஒரு பேட்டரியின் விலை 80,000 ரூபாய் வரை ஆகுவதாக தகவல்.

அந்த வகையில் 10 வருடத்திற்கு 3 பேட்டரி வீதம் * 80,000 ரூபாய் = 2,40,000 ரூபாய்
பெட்ரோல் வண்டியை விட எலெக்ட்ரிக் வண்டியின் தேய்மான செலவு கம்மியாக தான் இருக்கும் அந்த வகையில் 10 வருடத்திற்கு ஒரு 40,000 ரூபாய் எடுத்துக் கொள்வோம். பைக் விலை 1,60,000 ரூபாய் என எடுத்துக் கொள்வோம்.

10 வருடத்திற்கான ஒரு எலெக்ட்ரிக் வண்டியின் ஒட்டு மொத்த செலவீனம் (வண்டி விலை சேர்த்து), வண்டிவிலை + எலெக்ட்ரிசிட்டி + பேட்டரி விலை + தேய்மானம் உட்பட: பைக் விலை 1,60,000 ரூபாய் + 10 வருடத்திற்கான எலெக்ட்ரிசிட்டி விலை 60,000 ரூபாய் + 3 பேட்டரியின் விலை 2,40,000 ரூபாய் + தேய்மான செலவு 40,000 ரூபாய் = 5,00,000 ரூபாய்

முடிவாக பார்த்தால்,

சாதாரணமாக 10 ரூபாய்க்கு 100 கி.மீ என்று பார்க்கும் போது எலெக்ட்ரிக் வண்டி வாங்கி விடலாமே என உடனே தோன்றும், ஆனால் லாங் டர்ம் பெனிஃபிட் என்று ஒன்று இருக்கிறது அதை கணக்கிட்டால் பெட்ரோல் பைக்கே இலாபமாக தெரியும், நல்ல கண்டிசனில் வைத்து இருந்தால் Revalue என்பதும் பெட்ரோல் பைக்கிற்கு நன்றாகவே இருக்கும், ஆனால் எலெக்ட்ரிக் பைக்கிற்கு அப்படி இல்லை, Revalue என்பது சுத்தமாக இருக்காது.

“ முடிவாக உங்களுக்கு லாங்க் டர்ம் பெனிஃபிட் தான் வேண்டும் என்றால் பெட்ரோல் பைக் பெட்டர், உங்களுக்கு ஷார்ட் டர்ம் பெனிஃபிட்டே போதும் என்றால் எலெக்ட்ரிக் பைக் வாங்குங்கள், ஆனால் எலெக்ட்ரிக் பைக் தான் இலாபம் என்ற மைண்ட்செட்டை கழட்டி வைத்து விட்டு வாங்குங்கள் “

About Author