ட்விட்டரை கைப்பற்றினார் டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்!
Elon Musk Take Over Twitter For 44 Billion Dollar
அன்று ட்விட்டர் என்ன விலை என்று கேட்டவர் இன்று ட்விட்டரையே தன் வசப்படுத்தி இருக்கிறார்.
ஒரு காலத்தில் ட்விட்டர் என்ன விலை என்று ட்விட்டரிலேயே பதிவிட்டவர் தான் எலான் மஸ்க். ஆனால் தற்போது அந்த ட்விட்டரையே கையகப்படுத்தும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார். கிட்ட தட்ட 43 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 3 லட்சம் கோடிக்கு பேசி ட்விட்டரை தன் பக்கம் இழுத்து இருக்கிறார் எலான் மஸ்க்.
“ அவ்வப்போது ட்விட்டரில் சர்ச்சையான ட்வீட்களை அள்ளி வீசும் எலான் மஸ்க், தற்போது ட்விட்டரையே கைவசப்படுத்தி இருக்கிறார் என்றால் அதை வைத்து என்ன என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை “