தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா, சந்த் ஏவுகணை சோதனைகள் வெற்றி!
பொக்ரானில்,வெகு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா, சந்த் ஏவுகணை சோதனைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், இந்திய விமானப்படை இணைந்து நடத்திய ஏவுகணை பரிசோதனையில், பினாகா என்ற குழல் உந்துகணை செலுத்தி மற்றும் சந்த் (SANT- Standoff Anti Tank Missile) எனப்படும் ஹெலிகாப்டரில் இருந்து பீரங்கிகளை தாக்கும் வல்லமையுடைய ஏவுகணையும் வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டது.
Pinaka ER எனப்படும் இந்த குழல் உந்துகணை செலுத்தி, சுமார் 40 கிமீ தொலைவிற்கு இடையே வானில் இருக்கும் இலக்குகளை தரையில் இருந்து துல்லியமாக தாக்கும். சந்த் எனப்படும் Anti Tank Missile, ஹெலிகாப்டரின் உதவியுடன், சுமார் 10 கிமீ தொலைவில் இருக்கும் பீரங்கிகளை குறிவைத்து துல்லியமாக தாக்கும் வல்லமை பெற்றது.
“ படைகளை, ஆயுதங்களை பலப்படுத்தும் போதே ஒரு நாடு வல்லமை நாடாக உருப்பெறும். அந்த வகையில் இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு இணையாக வெகு விரைவில் வல்லமை நாடாகும் என்பதில் ஐயமில்லை “