கிருமிநாசினி திறன் கொண்ட, மக்கும் தன்மை உடைய சூப்பர் மாஸ்க் ரெடி!
Scientists Discovered Self Disinfecting Bio Degradable Face Mask
பாக்டீரியா, வைரஸ்சை எதிர்த்து போராடும் திறன் உடைய, மக்கும் தன்மை உடைய மாஸ்க் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர் இந்திய விஞ்ஞானிகள்.
நானோ துகள்கள் பூசப்பட்ட, தாமிரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட, கிருமிநாசினியாக செயல்படும் முகக்கவசம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள், ரெசில் கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இது பாக்டீரியா, வைரஸ் நுண்கிருமிகளை எதிர்ப்பதோடு மக்கும் தன்மையாகவும் இருக்கும்.
“ நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மாஸ்க்குகள் மக்கும் தன்மையற்றதாகவே இருக்கிறது. கிருமிகளை எல்லாம் கட்டுப்படுத்துமே தவிர எதிர்ப்பதில்லை அந்த வகையில் இந்த மாஸ்க் ஒரு சூப்பர் மாஸ்க் “