வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்தது பிரிந்தது ஆதித்யா எல் 1!
வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் பிரிந்து இருப்பதாக இஸ்ரோ அறிவித்து இருக்கிறது.
சூரியனை குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிந்து இருப்பதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
தற்போது ராக்கெட்டில் பிரிந்து இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் விண்வெளியின் லெக்ராஞ்சியன் 1 முனையில் நிறுத்தப்படுமாம். இந்த முனை பகுதியில் சூரியன் மற்றும் புவியின் ஈர்ப்பு விசை ரத்து செய்யப்படுவதால் விண்கலம் இயங்க குறைந்த எரிபொருளே எடுத்துக் கொள்ளும். விண்கலத்தின் ஆயுட்காலமும் இதனால் அதிகரிக்குமாம்.
“ இனி மற்ற நாடுகளை போல இந்தியாவும் சூரிய ஆராய்ச்சியில் இருக்கும் என்பது பெருமிதத்திற்குரியது “