ஊழியர்களை எச்சரித்த TCS நிறுவனம், காரணம் என்ன?
வீட்டில் இருந்து வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது TCS நிறுவனம்.
கொரோனோ சூழலுக்கு பிறகு, ஐடி ஊழியர்கள் பலரும் அலுவலகத்திற்கு வராமல் இன்னமும் வீட்டில் இருந்தே தங்கள் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு இடையிலான ஒரு திட்டமிட்ட மேம்பாடு இல்லாததாக நிறுவனங்கள் உணர்வதால், ஊழியர்கள் அனைவரையும் மார்ச் மாதத்திற்குள் அலுவலகம் திரும்ப உத்தரவிட்டு இருக்கிறது TCS நிறுவனம்.
“ அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் போது ஒரு திட்டமிட்ட மேம்பாடு இருக்கும், ஊழியர்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பு இருக்கும் என்று TCS போன்ற நிறுவனங்கள் யோசிப்பதாக தெரிகிறது. அதுவே இந்த எச்சரிக்கைக்கும் காரணமாக இருக்கலாம் “