இந்திய ஆழ்கடலை ஆராயக் களம் இறங்கும் ’சமுத்ராயன்’ கலம்!
மனிதர்களுடன் சென்று ஆழ்கடலை ஆராயக்கூடிய ‘சமுத்ராயன்’ கலத்தை சென்னையில் துவங்கி வைத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்.
1,000 முதல் 5,500 மீ ஆழம் வரை சென்று ஆழ்கடலில் உள்ள தாது வளங்களை மனிதர்களுடன் சென்று கண்டறியும் ‘சமுத்ராயன்’ கலத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சென்னையில் துவங்கி வைத்துள்ளார். மனிதர்களுடன் ஆராயும் நீர்மூழ்கி கலனை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, பிரான்ஸ்,ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்திருக்கிறது.
இஸ்ரோ, சென்னை ஐஐடி, டிஆர்டிஒ உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கி கொண்டு இருக்கும், மனிதர்களுடன் ஆழ்கடலை ஆராயக் களம் இறங்கும் மற்றுமொரு கலமான மத்சியா-6000, 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் ஒத்திகைக்கு தயாராகும் என்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்து இருக்கிறார்.
“ விண்ணை ஆராய்ந்தோம், மண்ணை ஆராய்ந்தோம், காற்றை ஆராய்ந்தோம், இனி ஆழ்கடலுக்கும் சென்று ஆராய்வோம் “