இஸ்ரோவின் முயற்சியால் மீண்டு வருமா விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்?
நிலவின் தென் துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ இருக்கும் நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டு வருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் அதன் பணிகளை சிறப்பாக செய்து விட்டு, நிலவில் இரவு தொடங்கியதும் உறக்க நிலைக்கு சென்று விட்டது. தற்போது 14 நாட்கள் கழித்து மீண்டும் வெளிச்சம் விழ இருப்பதால் லேண்டர் மற்றும் ரோவரை இஸ்ரோ இன்று எழுப்ப முயற்சிக்க இருக்கிறது.
“ இஸ்ரோவின் இந்த முயற்சி மட்டும் வெற்றிகரமாக நடந்து விட்டால் மேலும் சில நாட்கள் லேண்டரும் ரோவரும் இணைந்து நிலவில் ஆய்வினை தொடங்கும் “