Aaha Kalyanam Serial Today Episode | 05.06.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹாவை சூர்யா வேண்டா வெறுப்பாக ரிசப்ஷனுக்கு கிளம்பி இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு கிளம்பினார். ஆனால் பாட்டி மஹாவுக்கு பக்குவமாக எடுத்து சொல்லி, புரியவைத்து இது எதுவுமே எதேச்சையாக நடக்கவில்லை. எல்லாமே கடவுளின் திட்டம் தான் என்று கூறினார். அடுத்த நாள் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தார்கள். கோடீஸ்வரி தன் மகளின் ரிசப்ஷனுக்கு கண்டிப்பாக நான் போவேன் என்று கூறினார். ஆனால் தசரதன் அதற்கு தடை போட்டார். இதை எல்லாம் செய்து மீண்டும் மீண்டும் மஹாவின் வாழ்க்கையில் குழப்பத்தை உண்டு படுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால் கோடீஸ்வரி அதற்கு பிடிவாதமாக இருந்து அங்கு கிளம்பினார். அதே நேரம் ஐஷ்வர்யா தன் ஃபோன் காலை கௌதம் எடுப்பதே இல்லையே, ஒரு வேலை அவருக்கு என்னை பற்றிய உண்மை தெரிந்து இருக்குமோ என்று பயந்தார். அது மட்டும் இல்லாமல் அவரது ஆபீஸ்க்கும் அழைத்து அவரை பற்றி விசாரித்தார். ஆனால் மூன்று நாளாக வேலைக்கு யாருமே வரவில்லை என தெரிய வந்தது. இதனால் மேலும் ஐஷ்வர்யாவுக்கு சந்தேகம் வந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author