ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா இருவரும் வரவேற்பில் ஜோடியாக நின்றார்கள். அதை பார்த்து கோடீஸ்வரி மிகவும் சந்தோஷம் அடைந்தார். மேலும் பத்திரிக்கை ஆட்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு சூர்யாவை கோபப்படாமல், பொறுமையாக பதில் சொல்ல மஹா பக்குவ படுத்தினார். அதே போல் அவர்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு சூர்யா தன்மையாக பேசி சமாளித்தார். பின் ஃபோட்டோ எடுக்க இருவரும் சேர்ந்து நின்றார்கள். இதை எல்லாம் பார்த்த ஐஷ்வர்யா கோவத்தில் கொந்தளித்தார். நான் நிற்க வேண்டிய இடம் இது, இந்த அவீட்டு மருமகளாக வருவேன் என்று நினைத்தேன். ஆனால் இப்போது நான் இங்கு ஒரு வேலைக்காரி போல் நிற்கிறேன். இதற்கு மஹா தான் காரணம் என்பது போல் யோசித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….