ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹாவின் வரவேற்பு ஆரம்பம் ஆனது. சூர்யாவை பத்திரிக்கை ஆட்கள் போட்டோ எடுக்க அழைத்தார்கள். அதற்கு மஹா வர முடியாது என்று கூறினாலும், அவரை இழுத்து பிடித்து போட்டோ எடுத்து விளையாடுவது போல் நடந்து கொண்டார் சூர்யா. இதை பார்த்த அனைவரும் அவர்கள் இருவரும் பேசி சிரித்து விளையாடுவது போல் நினைத்தார்கள். ஐஷ்வர்யாவுக்கு இது தான் நிற்க வேண்டிய இடம், இது நான் கேட்ட வேண்டிய விலை உயர்ந்த புடவை, நான் போட்டு அலங்காரம் பண்ண வேண்டிய நகைகள் என்று பொறாமையில் பொங்கினார். அதே நேரம் சித்ரா தேவி தன்னை அசிங்கப்படுத்திய ராஜலக்ஷ்மியை இந்த மஹாவை வைத்தே அசிங்கப்படுத்துவேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…