ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா வீட்டில் நடக்கும் அந்த விழாவுக்கு எங்களையும் அழைத்து உள்ளர்கள் என்று ஐஷ்வர்யா கௌதமிடம் கூறினார். அவரும் வரவேண்டாம் தேவை இல்லாத பிரச்சனை என்று சமாளித்தார். ஆனால் அவரது ஃபோனை சித்ரா தேவி புடிங்கி உனக்கு பெண் பார்த்து உள்ளேன். இந்த விழாவில் எல்லார் முன்னிலையிலும் அதை பற்றி பேசுவேன் என்று கூறினார். அதை கேட்டதும் ஐஷ்வர்யா இனியும் பொறுமையாக இருக்க கூடாது. கண்டிப்பாக அவர்கள் வீட்டுக்கே சென்று கௌதம் உடன் சீக்கிரமே திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தார். கோடீஸ்வரி வீட்டில் அனைவரும் கிளம்புவதற்கு முன் ஐஷ்வர்யா புடவை கட்டி தயார் ஆனார். ஆனால் கோடீஸ்வரி அவரை அழைத்து செல்ல மாட்டேன் என்று கூறி கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….