Aaha Kalyanam Serial Today Episode | 27.06.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யாவுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்தது. மஹாலக்ஷ்மி என்பவர் அவரது அக்காவை காணவில்லை என்று புகார் கொடுத்து இருந்தார். அதை பற்றி தகவல் தெரிந்ததும் அவருக்கு அழைத்தோம். ஆனால் அவருக்கு ஃபோன் போகவில்லை என்று கூறினார். சூர்யாவின் மனைவி என்று குறிப்பிட்டதால் சூர்யாவுக்கே அழைத்து இருந்தார்கள். பின் அவருக்கு ஐஷ்வர்யா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது என்று கூறினார். சூர்யா தானும் அங்கே வருவதாக கூறினார். அதே நேரம் மஹாலக்ஷ்மியிடம் அன்று இரவு தனியாக போலீஸ் ஸ்டேஷன் சென்றதை பற்றி சூர்யா விசாரித்தார். மஹாவும் அதை ஒத்துக்கொண்டார். தன் அக்காவின் நிலை என்ன என்று தெரியவே புகார் கொடுத்தேன் என்று கூறினார். இப்போதும் மஹா வேண்டும் என்றே சூர்யாவை திருமணம் செய்து கொண்டதாக சூர்யா நினைத்தார். அதை ஐஷ்வர்யா வாயால் சொல்ல வைப்பேன் என்றும் கூறினார். உடனே அவர் தங்கி இருக்கும் இடத்துக்கு கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..

About Author