ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி மஹாவை பார்க்க ஆசையோடு வந்தார். ஆனால் வந்த இடத்தில் மஹா இங்கு ஒரு வேலை ஆளுக்கு என்ன மரியாதையா அதை அவருக்கு தருவோம். வேலை ஆளுக்கு என்ன தேவையோ அதையும் செய்துவிடுவோம் என்று சூர்யா கூறினார். அதை கேட்டதும் கோடீஸ்வரி நொறுங்கிப்போனார். தன்னை பற்றி என்ன பேசினாலும் பரவாயில்லை, என் மகளை இந்த வீட்டு மருமகளாக நடத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சூர்யா அதற்கும் கோவப்பட்டு கத்தினார். உடனே கோடீஸ்வரி அவர் காலில் விழுந்து அழுது மன்னிப்பு கேட்டார். அதை மஹாவால் சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் அம்மாவை அடுத்தவர் காலில் விழுவதை பார்க்க முடியாது என்று கூறினார். பின் திருமணத்திலும் என்ன நடந்தது உண்மையில் என்பதை பற்றியும் பேசினார். இந்த குழப்பம் அத்தனைக்கும் உங்கள் வீட்டில் தான் ஒருவர் காரணம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…