ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா ஐஷ்வர்யா இடத்தில் அமர்ந்து செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்தார். பெற்றோர்களுக்கு பாத பூஜையும் செய்தார். அப்போது மஹாவின் அப்பா இந்த கை மஹாவின் கை போல் உள்ளது என்று கேட்டார். ஆனால் கோடீஸ்வரி முடிந்த வரை சமாளித்து பேசினார். ஒரு கட்டத்தில் அவரை சமாளிக்க முடியவில்லை. தனியாக அழைத்து பேசினார். அப்போது ஐஷ்வர்யா மண்டபத்தை விட்டு ஓடிய விஷயம் தெரிய வந்தது. அதே நேரம் பிரபா அவரது நண்பர்களோடு சேர்ந்து ஐஷ்வர்யாவை தேடி அலைந்தார். ஐஷ்வர்யா மற்றும் கௌதம் காரில் வெகு தூரம் சென்றார்கள். போகும் வழியில் ஒரு கோவிலில் நமது திருமணத்தை முடித்துக்கொள்ளலாம் என்று கூறினார் ஐஷ்வர்யா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….