பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் முன்னணியில் இருக்கும் ஒரு சீரியல். இதில் நல்ல பாசமான பெண்ணுக்கு கணவராக இருக்கும் கோபி எப்படி தன் பழைய காதலியை எண்ணிக்கொண்டு பொய்களை கூறி, இரண்டு பக்கமும் ஏமாற்றுகிறார் என்பது இதன் கதை.
இந்த கதை இப்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் கோபியின் பொய்களும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. ரசிகர்கள் ஏற்கனவே கடுப்பில் இருக்க, இந்த சீரியலை பற்றி புது தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி பார்த்தால் இந்த சீரியல் மேற்குவங்கத்தில் வந்த ஒரு வங்காள சீரியலின் தழுவல் ஆகும். அந்த சீரியல் கோபி பாக்கியாவை ஏமாற்றிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அவர் அதை கண்டுபிடித்து கணவரை பிரிந்து செல்வார். பின்னர் ராதிகாவை மனம் முடிப்பார் கோபி.
அதற்குப் பிறகு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படும். ராதிகாவுக்கு கோபியை பற்றிய உண்மைகளும் தெரியவந்து கோபி நடுத்தெருவில் நிற்பார் என கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்