அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி! – Baakiyalakshmi today episode 03.11.2021 review
Baakiyalakshmi Easwari shocks Jeni
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியன் குடித்துவிட்டு பிரச்சனை செய்ததை பாக்யா சொல்லாமல் விட்டதால் ஈஸ்வரியின் கோபம், ஜெனியின் குடும்பம் பக்கம் திரும்பியது. அவர் செழியனின் போனிலிருந்து ஜெனியின் அப்பா ஜோசப்பிடம் வாக்குவாதம் செய்கிறார். வார்த்தைகள் தடிக்கிறது.
இனி ஜெனி எங்கள் வீட்டிற்கு தேவை இல்லை என ஈஸ்வரி கூற, நாங்களும் அவளை அனுப்ப மாட்டோம் என ஜோசப் கூறுகிறார். இதைப் பார்த்து பாக்கியா அதிர்ச்சி மட்டுமே ஆகிறார். உண்மைகள் எதையும் தெளிவாக கூறவில்லை.
பின்னர், அவர் கோபியிடம் இந்த விவரங்களை கூறி பாக்கியாவும் கோபியும் ஜெனியின் வீட்டுக்கு சென்று வரலாம் என நினைக்கிறார்கள். ஆனால், அதையும் ஈஸ்வரி தடுத்து விடுகிறார். பின்னர் ஜெனியின் வீட்டில் அவர்கள் அனைவரும் வருத்தப்படுகிறார்கள். ஜோசப் இன்னும் கோபமாகவே இருக்கிறார். கவலையாக இருக்கும் செழியனை எழிலும் கோபியும் ஆறுதல் கூறி சமாதானப்படுத்துகிறார்கள்.