Baakiyalakshmi today episode 06.09.2021 update
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகாவின் வீட்டிற்கு உணவு கொடுக்க சென்ற பாக்கியா அன்னையர் தின பள்ளி கொண்டாட்டங்களைப் பற்றி பேசுகிறார். இன்னமும் இனியாவின் விருப்பத்திற்காக போகலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருக்கிறார். ஈஸ்வரி வீட்டில் அனைவர் முன்னிலையிலும் கிண்டல் செய்ய பாக்யா மேலும் குழப்பம் ஆகிறார்.
மாலையில் மீண்டும் ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் பாக்கியா, ராதிகா மற்றும் மயூ சேர்ந்து ஆடும் நடனத்தை ரசிக்கிறார். அவரும் பின்னர் மயூவோடு சேர்ந்து ஆடுகிறார். அதே சமயத்தில் அங்கு வந்த கோபி ராதிகாவின் வீட்டில் பாக்கியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓட்டம் எடுக்கிறார்.
பின்னர், கோபியையும் அன்னையர் தின கொண்டாட்டத்திற்கு வருமாறு இனியா அழைக்கிறார். ஈஸ்வரின் கிண்டல்களுக்கு பின் கோபியின் முன்னிலையில் தனக்கு நடனத்தின் மீது உள்ள காதலை பற்றி பாக்கியா முதல் முறையாக மனம் திறக்கிறார். ஒரு பாடலுக்கு நடனமும் ஆடுகிறார். பாக்கியாவின் நடனத்தை கண்டு கோபி அதிர்ச்சி அடைவதோடும் எழில் மகிழ்ச்சி அடைவதோடும் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்