உடைந்துபோன பாக்யா! Baakiyalakshmi today episode 06.10.21 update
Baakiyalakshmi cheated and Gopi lies
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி ஆத்திரத்தோடு பாக்கியா மீது எரிந்து விழுகிறார். பாக்கியலட்சுமி அழுதுகொண்டே இருக்க கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். மனமுடைந்து இருக்கும் பாக்யாவை ராமமூர்த்தியும் எழிலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்கள். காவல்துறை அதிகாரி இதுபோல் பல சம்பவங்கள் நடப்பதாகவும் பணம் கிடைத்தால் கூறுவதாகவும் கூறிவிடுகிறார். மேலும் பாக்கியா நம்பிக்கையை இழக்கிறார்.
மீண்டும் வீட்டில், ஈஸ்வரி பாக்யா திட்டுகிறார். பாக்கியாவுடன் வேலை செய்த பெண்கள் விவரம் அறிந்து வீட்டிற்கு வருகிறார்கள். ஆவேகள் பாக்கியாவை சந்தேகப்பட, இரண்டு நாட்களில் பணம் கொடுத்து விடுவதாக எழில் மீண்டும் வாக்களிக்கிறார். ராதிகாவின் வீட்டில் கோபி பொய்கள் பல கூறி ராதிகாவின் தோளில் சாய்ந்து ஆறுதல் தேடுகிறார். பாக்யா தன் வாழ்க்கைக்கு தேவையில்லை என மனதில் முடிவு செய்கிறார்.
கடைசியாக எழில் தன் நண்பனோடு பாக்யாவுக்கு வந்த தொலைபேசி எண்ணை எடுத்துக் கொண்டு தானே களத்தில் இறங்குகிறார்.