பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா, பாக்கியா சமையல் செய்வது பிடிக்காமல் கோபமாகவே இருக்கிறார். பின்னர், பாக்யா நடுவர்களிடம் தனக்கு சமையலின் மேலுள்ள காதலையும் ல், ஏன் இந்த உணவுகளை சமைத்தார் என்பதையும் கூறுகிறார். அவர்கள் போனபின், இனியா மேலும் தன் தாயிடம் எறிந்து விழுகிறார்.
புதிதாக வந்த நடுவர் என, நடிகை ரேகாவை அறிமுகம் செய்கிறார்கள். பாக்யா அவரை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். இனியா எரிச்சலாகவே பேசிக்கொண்டிருக்க, போட்டியில் தேர்வான பத்து பெயரில் பாக்யாவின் பெயரும் வருகிறது. மற்ற அம்மாக்கள் தங்களது திறமைகளை காட்டும் பொழுது, இனியா இருப்புக் கொள்ள முடியாமல் இருக்கிறார். கடைசியாக பாக்யாவின் முறை வருகிறது. அவர் பயத்தோடு நிற்பதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.