குழப்பத்தில் ராதிகா! Baakiyalakshmi today episode 09.11.2021 review
Baakiyalakshmi Radhika confused
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராமமூர்த்தி சொத்துக்களை கோபி பெயரிலிருந்து பாக்யாவின் பெயருக்கு மாற்றலாம் என முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக அவர் தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். வீட்டில் அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
பின்னர், செழியன் ஜெனியை தவறாக நடத்தியதற்க்காக மிகவும் வருந்துகிறார். ஜெனி செழியனின் போன் கால்களை எடுக்க மறுக்கிறார். செழியன் பாக்கியாவிடம் இதைப்பற்றி வருத்தத்தோடு கூற பாக்யா ஜெனியுடன் தொலைபேசியில் பேசுகிறார். பாக்யா பின்னர் செழியனிடம் இனியாவது தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு கூறுகிறார்.
மாலையில் கோபி மனமில்லாமல் பாக்யாவை அழைத்துக்கொண்டு திருமண வரவேற்பிற்கு செல்ல சம்மதிக்கிறார். அதே நிகழ்ச்சிக்கு ராதிகாவும் கிளம்புகிறார். ராதிகாவின் தாய் ராதிகாவை கோபியை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திகிறார்.