Baakiyalakshmi Today episode – 01 March 2022 review
Baakiyalakshmi today episode review – 1 March 2022. பாக்யலக்ஷ்மி இன்றைய எபிசோட் ரிவியூ.
Baakiyalakshmi Gopi Shocked
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கும் பாக்யாவிற்கும் வந்த விவாகரத்து குறித்த கடிதத்தை பிரித்து படிக்க வேண்டாம் என ஏமாளி தனமாக பாக்யாவே கூறிவிட்டார். பின்னர், இனியா ஜெனியிடம் சண்டை போட்டு கிளம்ப, பாக்யா ஜெனியை பாராட்டுகிறார். எழிலிடம் பிசியோதெரபிஸ்ட் குறித்த தகவலைக் கூறுகிறார்.
எழில் இனியாவிடம் பேசுகிறார். இந்த வயதிற்கு உரித்தான ஈர்ப்பும் காதலும் வெவ்வேறு என எளிமையாக புரிய வைக்கிறார். இனியாவும் புரிந்து கொள்கிறார்.
கோபிக்கு ராதிகா போனில் அழைத்து நீதிமன்றத்தில் இருந்து கடிதம் வந்திருக்கும் என கூற, கோபி அதிர்ச்சி அடைந்து கீழே வருகிறார். அங்கு அந்தக் கடிதத்தை பரபரப்புடன் அனைவரும் தேடுகிறார்கள். எழிலுக்கு சிறிது சந்தேகம் வருகிறது. கடைசியாக, யாரிடமும் அந்த கடிதத்தை கொடுக்காமல், தனது அறைக்கு வந்து கோபி ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார். இனியாவது பாக்யாவிற்கு உண்மைகள் தெரியவருமா என பார்ப்போம்.