மாட்டிக்கொண்ட கோபி – Baakiyalakshmi today episode 11.11.2021 review
Baakiyalakshmi Gopi in shock
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியின் தந்தை என்ன நடந்தாலும் செழியனுடன் தன் மகளை ஒன்றுசேர விடமாட்டேன் என கூறுகிறார். இதை கேட்டு ஜெனி அதிர்ச்சி அடைகிறார். ராதிகா குழப்பத்தோடு வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அங்கு கோபி வர ,அவரிடம் கோபமாக பேசி அவரை திருப்பி அனுப்புகிறார்.
வீட்டில் கோபி என்ன பிரச்சனை என்பது புரியாமல் குழம்பிப் போய் மீண்டும் மீண்டும் அழைக்க கோபியின் போன் கால்களை ராதிகா எடுக்க மறுக்கிறார். அப்பொழுது அங்கு வந்த பாக்கியா விடம் கோபி தனது நண்பர் தன்னிடம் பேசவில்லை எனப் புலம்புகிறார். பின்னர் பாக்யாவின் போனிலிருந்து ராதிகாவை அழைத்து பின்னர் நிதானித்து முயற்சியை கை விடுகிறார். அதை பார்த்துவிட்டு ராதிகா மீண்டும் அழைக்க, பாக்கியா தான் அழைக்கவில்லை என போனை வைத்து விடுகிறார். இப்பொழுதும் பாக்கியா விற்கு சந்தேகம் வராதது வியப்பைத் தருகிறது.
எழில் அமிர்தாவிடம் தனது காதலை சொன்னால் எப்படி இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி கனவும் காண்கிறார். காலையில் என்ன பரிசு அளித்து தனது காதலை வெளிப்படுத்தலாம் என அவர் யோசித்துக் கொண்டிருக்கும்பொழுது அங்கு பாக்யா வருகிறார். அவரிடம் எழில் அவருக்கு வந்த சிறந்த பரிசு என்ன என கேட்க, பாக்கியா தனக்கு யாரும் பரிசளித்தது இல்லை எனக் கூறுகிறார். கடைசியில் சந்தேகமாக எழில் காதலிக்கிறாரா எனவும் கேட்கிறார்.