குழந்தையை கலைக்கும் செழியன்? Baakiyalakshmi today episode update
Baakiyalakshmi Jeni Chezhian
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று அனைவரும் சிறந்த அம்மா விருது வாங்கியதற்கு பாக்கியாவை பாராட்டி பின்னர் கிண்டலும் செய்கிறார்கள். காலையில் எழும் பொழுது ஜெனிக்கு உடல்நிலை சரியில்லை. தலைசுற்றலும் வாந்தியும் சேர்ந்து அவரை வாட்டுகிறது.
பின்னர், இது கர்ப்பமாக இருக்கும் என அவர் சந்தேகிக்கிறார். இதைக்கேட்டு செழியன் அதிர்ச்சியாகிறார். பாக்கியாவிடம் இது பித்தவாந்தி எனக்கூறிவிட்டு செழியன் கர்ப்பத்தை பரிசோதிக்கும் கருவியை வாங்கி வருகிறார். அந்த கருவியும் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்கிறது. ஜெனியின் மகிழ்ச்சி செழியனின் முகத்தைப் பார்த்து குழப்பமாக மாறுகிறது. மீண்டும் பொய் கூறி ஜெனியை மருத்துவரிடம் அழைத்து செல்ல செழியன் முடிவு செய்கிறார்.
இந்த குழந்தையை அவர்கள் வைத்திருப்பார்களா இல்லை கலைத்து விடுவார்களா என அடுத்த வாரம் தான் பார்க்க வேண்டும்.