Baakiyalakshmi today episode 12.03.2021 review | Vijay Television
Baakiyalakshmi Gopi stays with Radhika
இன்று பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி ஊருக்கு போவதாக முடிவெடுக்க, பாத்தியா உருக்கமாக பேசி அவர் முடிவை மாற்ற வைக்கிறார். கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று தனது வீட்டில் இருக்க பிடிக்கவில்லை எனவும் இவர்களோடு சேர்ந்து இருக்கவே பிடித்திருக்கிறது எனவும் கூறுகிறார். ராதிகா, மயூரா மற்றும் கோபி மூவரும் ஒன்றாக தூங்குகிறார்கள்.
எழிலிடம் பாக்கியா கோபி குறித்து புலம்புகிறார். அப்பா மேல் எந்த சந்தேகமும் வராதது போல் எழில் பேசுவது வியப்பாக இருந்தது. பின்னர், காலையில் கோபி ராதிகாவிடம் காபி கேட்க அவர் அதை தர தாமதிக்கிறார். வீட்டிற்கு வரும் கோபியிடம் பாக்கியா அவர் எங்கு சென்றார் என கேட்பதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.