ராதிகா மனதில் சந்தேகம்? Baakiyalakshmi today episode 13.09.2021 update
Baakiyalakshmi Radhika Reshma
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஜெனிக்கு ஆறுதல் கூறி கஞ்சி வைத்துவிட்டு பாக்யா உணவு வழங்க கிளம்புகிறார். ராதிகா புது சேலைக்கு ஜாக்கெட் தைக்க டெய்லரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த செல்வியும் பாக்கியாவும் அந்த சேலையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். பாக்யா தனது சேலையின் புகைப்படத்தை காட்ட, ராதிகா மனதில் சிறிதளவு சந்தேகம் வருகிறது.
பின்னர், செல்வி ஒருவேளை ராதிகாதான் கோபியுடன் வந்த பெண்ணாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார்.இதைக் கேட்டு பாக்கியா மிகவும் கோபமாகி செல்வியை திட்டுகிறார்.
வீட்டில் ஜெனி இன்னும் முடியாமல் படுத்திருக்க, செழியன் ஒரு மருத்துவரிடம் அப்பாயின்மென்ட் வாங்குகிறார். பாக்யாவுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டு தன்னிடம் உண்மையை கூறுமாறு கேட்கிறார். ஜெனியும் கர்ப்பத்தைப் பற்றி கூறிவிடுகிறார். இது செழியனுக்கு தாங்க முடியாத கோபத்தை கிளப்புகிறது. பின்னர், இந்த மகிழ்ச்சியான விஷயத்தை ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியிடம் கூற அவர்கள் ஜெனி மற்றும் செழியனை ஆசீர்வதிக்கிறார்கள். மருத்துவரிடம் பாக்கியம் ஈஸ்வரியுமே அழைத்து செல்வதாக கூற, செழியன் கடுங்கோபம் ஆகிறார்.