ராதிகாவுக்கு பேரதிர்ச்சி! Baakiyalakshmi today episode 13th June 2024 review
Baakiyalakshmi Radhika shell shocked PC HotStar.jpg
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகா தூக்கம் வராமல் தவிக்கிறார். தன் கணவர் கோபி தன்னிடம் இப்பொழுதெல்லாம் பேசுவதே இல்லை தனியாக வேறு உறங்குகிறார் என கவலைப்படுகிறார்.
பாக்கியா தன்னுடைய உணவகத்தில் மாவரைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை என சீக்கிரம் வீட்டிலிருந்து கிளம்புகிறார். போகும் வழியில் அவர் நடை பயிற்சி செய்து கொண்டிருக்கும் ஈஸ்வரியையும் கோபியையும் பார்க்கிறார். ஈஸ்வரியிடம் பேசிவிட்டு அவர் செல்ல கோபி இவ்வளவு விரைவாக உணவகத்திற்கு சென்றால் வீட்டை யார் கவனித்துக் கொள்வது என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு தான் பாக்கியாஸ் சென்று இருப்பார். பாக்யாவை போல் வேலை செய்ய யாரும் வர முடியாது என கூறுகிறார். இதைக் கேட்டு தானும் பாக்யாவை போல் வேலை செய்வேன் என முடிவு செய்கிறார் கோபி. வீட்டிற்கு வந்ததும் அவரே தன் தாய்க்கு தோசை ஊற்றி கொடுக்கிறார். ராதிகாவின் உதவியை உதாசீனப்படுத்துகிறார். ராதிகா மிகவும் வருத்தமாக கமலாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்கு வந்த ஈஸ்வரி உங்களின் சுயரூபம் என் மகனுக்கு தெரிந்து விட்டது, விரைவில் நானும் என் மகனும் எங்கள் வீட்டிற்க்கே சென்று விடுவோம் என கூறுகிறார். இதைக் கேட்டு பேரதிர்ச்சி அடைகிறார் ராதிகா.
உணவகத்தில் பிரச்சனையை முடித்த பாக்யா பழனிச்சாமியின் புது Cafeவிற்கு அலங்காரம் செய்கிறார். அப்பொழுது அங்கு பழனிச்சாமி தன் குடும்பத்தோடு வந்து அதை பார்த்து அதிசயக்கிறார்.