ஜெனிக்கு என்ன ஆச்சு? Baakiyalakshmi today episode 14.10.2021 review
Baakiyalakahmi Jeni has bad news
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி பாக்கியம் கோபமாக பேசுகிறார். பாக்கியா கொடுத்த பணத்தை வாங்க மறுத்து விட்டு அவர் தனது காலை ஓட்டு கேட்டு விட்டதாக திட்டவும் செய்கிறார். பின்னர், காலையில் கோபி உறக்கமில்லாமல் சோர்வாக இருக்கிறார். அவரின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் இனியா பள்ளி கட்டணத்தை உடனடியாக கட்டுமாறு கோபமாக கூறிவிட்டு கிளம்புகிறார்.
பாக்யா நிலைமை புரிந்தது சோகத்தில் இருக்கும் கோபியின் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு கோபியிடம் பேசி புரிய வைத்து பள்ளி கட்டணத்திற்கான பணத்தையும் கொடுக்கிறார். பின்னர் இதை யாரிடமும் கூற மாட்டேன் எனவும் கூறுகிறார். கோபி நெகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொள்கிறார்.
வீட்டில் ஜெனிக்கும் செழியனுக்கும் குழந்தை விஷயத்தில் மீண்டும் சண்டை வருகிறது. அவர்களிடம் பேச பாக்யா செல்லும் பொழுது, கோபி தடுத்து விடுகிறார். பின்னர் இரவில் ஜெனி ரத்தப்போக்கு வருவதாக கூறுகிறார். அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள்.