Baakiyalakshmi today episode 15.11 2021 review
Baakiyalakshmi Ezhil in for shock
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி ராதிகா தான் தனக்கு வேண்டும் என தன் நண்பரிடம் அடித்துக் கூறுகிறார். அடுத்து எழில் தனது தங்கைக்கும் அம்மாவுக்கும் தான் வாங்கி வந்த கை கடிகாரங்களை கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறார். பின்னர், அவர்களை அமிர்தாவிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற வைக்கிறார். தனது நண்பனிடம் தன் காதலை அமிர்தாவிடம் இன்று கூறி விடுவேன் என மகிழ்ச்சியாக கூறிவிட்டு கிளம்புகிறார்.
கோபி, ராதிகா வீட்டுக்கு செல்ல, அங்கு ராதிகாவின் அம்மா அவரிடம் எரிச்சல்படுகிறார். கோபி அவரிடம் பேசி தன் குடும்ப வாழ்க்கை பற்றி பொய்கள் கூறி, மயூவையும் தன் மகள் போல பார்ப்பதாக கூறுகிறார். கோபியின் பேச்சு ராதிகாவின் அம்மாவின் கோபத்தை சற்றே குறைக்கிறது.
கடைசியாக, எழில் அமிர்தா வீட்டிற்க்கு செல்கிறார். அங்கு அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.