Baakiyalakshmi today episode 16.11.2021 review
Baakiyalakshmi Ezhil Shocked
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று அமிர்தா விடம் தன் காதலை சொல்ல எண்ணி அவர் வீட்டிற்கு சென்ற எழிலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அமிர்தா அவரது தாயை அறிமுகப்படுத்திய பின், தனது குழந்தையை காண்பித்து எழிலை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கல்லூரியில் படிப்பதால் குழந்தை தன் தாயுடன் ஊரில் வாழ்வதாக கூறுகிறார். அமிர்தாவின் மாமியார் தனது மகனை நினைத்து அழ எழில் அவரை சமாதானப்படுத்துகிறார்.
பின்னர் எழில் தன்னுடைய காதலை கூறாமலே வீட்டிற்கு வருகிறார். எழிலின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதை பாக்கியா உணர்கிறார். எழில் தனது வேலையில் சில பிரச்சினைகள் என கூறி தன் தாயின் மடியில் படுத்து ஆறுதல் தேடுகிறார். நண்பர் வீட்டிற்கு வந்தவுடன் அவரிடம் நடந்ததை கூற அவர் இந்த காதலை இப்பொழுதே முடித்துக் கொள்ளுமாறு கூறி விட்டு கிளம்புகிறார்.
கடைசியாக ஈஸ்வரி கோபியிடம் ராமமூர்த்தியுடன் ஏதாவது பிரச்சனையா என கேட்பதோடு எபிசோடு முடிவடைகிறது.